close
Choose your channels

அனேகன் பட நடிகையின் வேற லெவல் க்யூட்… வைரல் புகைப்படம்!

Thursday, February 25, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த “அனேகன்” திரைப்படம் கடந்த 2015 ஆம் ஆண்டில் வெளியானது. இந்தப் படத்தில் நடிகர் தனுஷ்க்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை அமேரா தஸ்தர். ஸ்லிம் பியூட்டி என அழைமொழி கொண்ட இவர் தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார். ஆனால் அந்தப் படத்திற்கு பிறகு இவருக்கு தமிழில் பெரிய அளவிலான வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் ஹிந்தியில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

தற்போது மும்பையில் வசித்து வரும் இவர் விதவிதமான போட்டோ ஷுட்டை நடத்தி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். இவரது இன்ஸ்டா பதிவிற்கு ரசிகர்கள் தொடர்ந்து வரவேற்பு அளித்து வருகின்றனர். அந்த வகையில் ஆரஞ்சு நிற கவுன் அணிந்து இவர் கொடுத்த போஸ் தற்போது இணையத்தில் படு வைரலாகி இருக்கிறது.

அனேகன் படத்திற்கு பிறகு தற்போது தமிழில் இரண்டு படங்களில் கதாநாயகியாக நடிகை அமேரா நடித்து வருகிறார். இதில் நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் “ஓடி ஓடி உழைக்கணும்” திரைப்படம் நகைச்சுவை கலந்த காதல் திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்நிலையில் நடிகை அமேரா பதிவிட்ட இன்ஸ்டா புகைப்படம் ரசிகர்களின் லைக்குகளை பெற்று வைரல் ஆகி இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.