close
Choose your channels

நீச்சல் உடை புகைப்படம் வெளியிட்ட நடிகை அனுஷ்கா சர்மா… வைரல் பதிவு!

Tuesday, November 16, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை அனுஷ்கா சர்மா. இவர் இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது ரசிகர்களுக்கு தெரிந்ததுதான். மேலும் இந்த ஜோடிக்கு வாமிகா என்ற மகள் பிறந்ததும் அந்த குழந்தையுடன் நடிகை அனுஷ்கா தனது நேரத்தை செலவிட்டு வருவதும் நாம் அறிந்ததுதான்.

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை அனுஷ்கா திருமணத்திற்கு பிறகு குறைவான படங்களில் மட்டுமே நடித்தார். மேலும் தனது குழந்தைக்காக கடந்த சில வருடங்களாக திரைப்படம் எதிலும் அவர் தலைக்காட்டவில்லை. அந்த வகையில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளியான “ஜீரோ” படத்தில் நடிகை அனுஷ்கா நடித்திருந்தார்.

ஆனால் விளம்பரப் படங்களில் தொடர்ந்து கவனம் செலுத்திவரும் அவர் தற்போது தயாரிப்பாளர் அவதாரத்தை எடுத்துள்ளார். அந்த வகையில் இர்ஃபான் கானின் மகன் பாபில் கான் நடிக்கும் முதல் நெட்ஃபிளிக்ஸ் நடத்தை நடிகை அனுஷ்கா தயாரிக்க உள்ளார்.

இதையடுத்து டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை பார்ப்பதற்காக துபாய் சென்ற அவர் தற்போது சூரிய ஒளியில் நனைந்தவாறு நீச்சல் குளத்திற்குள் நின்றிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். பச்சை வண்ணத்தில் மோனோகினி உடையணிந்து இருக்கும் இந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.