close
Choose your channels

இந்த ஒரு நம்பிக்கையில தான் கவுதம் மேனன் படத்துக்கு ஒப்புக்கொண்டேன்: ஏ.ஆர்.ரஹ்மான்

Friday, September 2, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள ’வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்ற நிலையில் இந்த விழாவில் இசைப்புயல் ஏஆர் ரகுமான் தொகுப்பாளர் கேட்ட பல சுவாரஸ்யமான கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அவ்வளவு தூரம் பயணம் செய்து வந்தாலும் இன்னும் புத்துணர்ச்சியுடன் இருக்கிறீர்களே என்று தொகுப்பாளர் கேட்டபோது, ‘எல்லாம் பழகி விட்டது’ என்று சிரித்துக் கொண்டே கூறினார். மேலும் பாடலாசிரியை தாமரை பற்றிய கேள்விக்கு பதிலளித்த போது, ‘தாமரை எந்த பாட்டு கொடுத்தாலும், நான் அதை எடுத்து கொள்வேன் என்றும், ஏனெனில் அவ்வளவு அழகாக அவருடைய பாடல் வரிகள் இருக்கும் கூறினார். மேலும் இந்த படத்தில் தாமரை 5 பாட்டு எழுதினார்கள் என்றும், அதில் நாங்கள் 4 பாடல்களை பயன்படுத்திக் கொண்டோம் என்று கூறினார்.

மேலும் கௌதம் மேனன் படத்தை எந்த நம்பிக்கையில் எங்கள் ஒப்புக் கொண்டீர்கள் என்று தொகுப்பாளர் கேட்ட போது, ‘கௌதம் மேனன் எப்படியும் ஒரு படத்தை கரை சேர்த்து விடுவார் என்ற நம்பிக்கை தான் என்றும் அதே போல் சிம்பு மேல் உள்ள நம்பிக்கையில் தான் இந்த படத்தில் இசையமைக்க ஒப்புக் கொண்டேன் என்றும் கூறினார்.

விமான நிலையத்தில் இளையராஜா உடனான சந்திப்பு குறித்து ஏ.ஆர்.,ரஹ்மான் கூறிய போது, விமான நிலையத்தில் இளையராஜாவை சந்தித்த போது மாஸ்க்கை எடுத்துட்டு பேசு என்று கூறினார். நான் எப்பவும் மாஸ்க்கை எடுக்க மாட்டேன், ஆனால் இளையராஜா சார் கூட பேசிக்கொண்டு இருந்தபோது மாஸ்க்கை எடுத்து விட்டேன் என்று கூறினார். மேலும் நாங்கள் இருவரும் இசை கம்போசிங் குறித்துப் பேசினோம் என்றும் அவர் தெரிவித்தார்.

இதனை அடுத்து கௌதம் மேனன் மேடைக்கு வந்தபோது, ’ஏஆர் ரகுமான் எப்பவுமே பிரஷ்ஷாக தான் ட்யூன் போடுவார் என்றும், அவர் எனக்கு 5 ட்யூன் கம்போஸ் செய்து காட்டி இருந்தால் அதில் நான்கை நான் ஓகே பண்ணிடுவேன்’ என்றும் கூறினார். இப்போ கடைசியாக ரிலீஸான 2 பாட்டு இரவு 2.45 மணிக்கு வீடியோ கால் மூலம் ஓகே செய்தது என்றும் அவர் கூறினார்.

இதனையடுத்து பாடகி ஸ்ரேயா கோஷல் மேடைக்கு வந்தபோது, ‘ஏஆர் ரகுமான் சார் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்றும், அவருடன் முதல்முதலாக லைவ் இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன் என்றும், அதுவும் சென்னையில் என்றும் கூறினார். சென்னையில் உங்களுக்குப் பிடித்த சாப்பாடு எது என்று தொகுப்பாளர் கேட்ட போது ’எனக்கு சென்னை சாம்பார் ரொம்ப பிடிக்கும்’ என்று கூறினார்.

Captain of the ship Director @menongautham is here at #VendhuThanindhathuKaadu Audio Launch!

An @arrahman Musical

Prod by @VelsFilmIntl @IshariKGanesh

A @RedGiantMovies_ Release@Udhaystalin@SilambarasanTR_ #VTKAudioLaunch #VTKTrailer #VTKFromSep15 pic.twitter.com/tPmUFxdZL8

— Vels Film International (@VelsFilmIntl) September 2, 2022

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.