close
Choose your channels

நீ மனசு வச்சா மட்டும் தான் காப்பாத்த முடியும்: அருள்நிதியின் 'டிமான்டி காலனி 2' ட்ரைலர்

Saturday, December 16, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அருள்நிதி நடித்த 'டிமான்டி காலனி' என்ற திரைப்படம் கடந்த கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் 8 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.

முதல் பாகத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அருள்நிதி நடிப்பில் உருவாகிய இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், முத்துக்குமார், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சாம் சிஎஸ் இசையில் உருவாகிய இந்த படத்தின் டிரைலர் இரண்டு நிமிடங்கள் இருக்கும் நிலையில் அதில் பல த்ரில் காட்சிகள் இருப்பதை அடுத்து முதல் பாகம் போலவே இந்த இரண்டாம் பாகமும் ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சர்ப்ரைஸ் ஆக இதில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளராக இருக்கும் அர்ச்சனாவும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில் அருள்நிதி மற்றும் அஜய் ஞானமுத்து ஆகிய இருவருக்குமே இந்த படம் திருப்புமுனையை கொடுக்கும் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.