close
Choose your channels

 இந்து முஸ்லிம் அடித்துக்கொண்டு  சாகலைன்னா?   சிம்பு தேவனின் 'போட்' டீசர்..!

Saturday, December 16, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் நடித்த ’புலி’ திரைப்படத்தை கடந்த 2015 ஆம் ஆண்டு இயக்கிய சிம்பு தேவன் 8 ஆண்டுகள் கழித்து இயக்கியிருக்கும் படம் 'போட்'. யோகி பாபு ஹீரோவாக நடித்திருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

கடந்த 1945 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த போது ஜப்பான், சென்னையில் குண்டு போட்டது. அப்போது சென்னையில் ஏராளமான சேதம் ஏற்பட்ட நிலையில் உயிர் பிழைப்பதற்காக முன்பின் தெரியாத 10 பேர் ஒரு படகில் வங்காள விரிகுடா கடலுக்கு செல்கின்றனர் அதில் ஒரு ஆங்கிலேயரும் உள்ளார்.

இந்த நிலையில் திடீரென படகில் ஓட்டை விழுகிறது. அப்போது படகில் இருக்கும் 10 பேர்களில் மூன்று பேர் கடலுக்குள் குதிக்க வேண்டும், இல்லையென்றால் 10 பேரும் சாக வேண்டிய நிலை ஏற்படும் என்று யோகி பாபு கூற ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்ளும் காட்சிகளை அடுத்து என்ன நடக்கிறது என்ற விறுவிறுப்பான கிளைமாக்ஸ் தான் இந்த படத்தின் கதை என்பது ட்ரெய்லரில் இருந்து தெரிய வருகிறது

சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் யோகி பாபு, கௌரி கிஷான், எம் எஸ் பாஸ்கர், சின்ன ஜெயந்த், மதுமிதா, லீலா உள்பட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையில் உருவாகிய இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.