close
Choose your channels

4வது திருமண நாள்.. மனைவிக்கு ஆர்யா கொடுத்த ரொமான்ஸ் முத்தம்..!

Saturday, March 11, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் ஆர்யா தனது நான்காவது திருமண நாளை கொண்டாடிய நிலையில் தனது மனைவிக்கு ரொமான்ஸ் மூடில் முத்தம் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்தப் புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரை உலகின் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவர் ஆர்யா என்பதும் ‘சார்பாட்டா பரம்பரை’ வெற்றிக்கு பின்னர் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தன்னுடன் ’கஜினிகாந்த்’ ’காப்பான்’ உள்ளிட்ட படங்களில் நடித்த சாயிஷாவை காதலித்து ஆர்யா திருமணம் செய்து கொண்டார். கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதி திருமணம் நடந்த நிலையில் இந்த தம்பதிக்கு அர்யானா என்ற ஒரு மகள் உள்ளன உள்ளார்

இந்த நிலையில் ஆர்யா மற்றும் சாயிஷா இருவருமே தங்களது சமூக வலைதளங்களில் அவ்வப்போது ரொமான்ஸ் புகைப்படங்களை பதிவு செய்து வரும் நிலையில் தற்போது நான்காவது திருமண நாளை கொண்டாடிய புகைப்படங்களை பதிவு செய்துள்ளனர் ஆயிஷாவுக்கு ரொமான்ஸ் மூடில் ஆர்யா கொடுத்த முத்தம் மற்றும் மனைவி மகள் மாமியாருடன் இருக்கும் புகைப்படம் ஆகியவைகளுக்கு ரசிகர்களின் லைக்ஸ் குவிந்து வருகிறது.

தனது திருமண நாள் குறித்து சாயிஷா தனது இன்ஸ்டாகிராமில், ‘4 ஆண்டுகளுக்கு முன்பு நான் என் வாழ்க்கையின் காதலை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தேன். பொறுமை, வலிமை மற்றும் என்னை மிகவும் மகிழ்விக்கும் திறன் நிறைந்த ஒரு திடமான மனிதர்! இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் என் ஜான்! திருமணம் உங்களுக்கு நிறைய சவால்களை தந்தாலும், எப்போதும் என் பக்கத்தில் இருப்பதற்கு நன்றி!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.