close
Choose your channels

அஸ்வின் - ஷிவாங்கிக்கு கிடைத்த விருது: ரசிகர்களுக்கு சமர்ப்பணம் செய்து இன்ஸ்டாகிராமில் போஸ்ட்!

Friday, April 2, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிகழ்ச்சி மிக விரைவில் முடிய போகிறது என்ற சோகம் மட்டும்தான் இந்த நிகழ்ச்சியை ரசித்து வரும் ரசிகர்களுக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் அஸ்வின்-ஷிவாங்கி ஜோடி செய்யும் ரொமான்ஸ் சேட்டைகள் ரசிக்க வைக்கும் அளவுக்கு இருக்கும் என்பதும் இந்த ரொமான்ஸ் காட்சியை இனி பார்க்க முடியாதே என்ற வருத்தம்தான் அனைவரது மனதிலும் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் இந்த நிகழ்ச்சியில் அஸ்வின் மற்றும் ஷிவாங்கி ஆகிய இருவருக்கும் 'Trending Pair' என்ற விருது கிடைத்துள்ளது. இந்த விருதுடன் அஸ்வினுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள ஷிவாங்கி இந்த விருதை அளித்த விஜய் டிவிக்கு நன்றி என்று கூறியுள்ளார்.

மேலும் ’குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் 9 முறை அஸ்வினுடன் இணைந்து உள்ளேன் என்றும் அஸ்வினின் மிகப்பெரிய ஒத்துழைப்புக்கு எனது நன்றி என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விருதை அஸ்வின்-ஷிவாங்கி ரசிகர்களுக்கு சமர்ப்பணம் செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த இன்ஸ்டாகிராம் போஸ்ட் தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.