close
Choose your channels

ஸ்கை டைவிங் செய்யும் அட்லி பட நடிகை: த்ரில் புகைப்படங்கள்!

Thursday, October 20, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் அட்லி இயக்கிய படத்தில் நாயகியாக நடித்த நடிகை ஒருவர் தான் ஸ்கை டைவிங் செய்துள்ள புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

இயக்குனர் அட்லி இயக்கிய முதல் படமான ’ராஜா ராணி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை நஸ்ரியா. அதன்பின்னர் தனுசுடன் ’நய்யாண்டி’ உள்பட சில படங்களில் நடித்தார்.

இதனை அடுத்து பிரபல நடிகர் பகத் பாசிலை கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நஸ்ரியா அதன் பின் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார்.

இந்த நிலையில் தற்போது துபாய் சென்று இருக்கும் நஸ்ரியா துபாயில் ஸ்கை டைவிங் செய்த த்ரில் காட்சிகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். விமானத்திலிருந்து ஸ்கை டைவிங் பயிற்சியாருடன் அந்தரத்தில் குதித்த நஸ்ரியா, துபாயின் மொத்த அழகை கண்டு ரசித்த புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார். இந்த அனுபவம் தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாகவும் தனது கனவு நனவானதாகவும் நடிகை நஸ்ரியா இந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.