close
Choose your channels

ஷாருக்கான் படத்தை இயக்கவுள்ள அட்லியிடம் ஏற்பட்ட திடீர் மாற்றம்: இணையத்தில் வைரல்!

Tuesday, March 30, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ’தெறி’ ’மெர்சல்’ மற்றும் ’பிகில்’ ஆகிய மூன்று படங்களை தொடர்ந்து இயக்கிய இயக்குனர் அட்லி அடுத்ததாக ஷாருக்கான் நடிக்கும் திரைப்படத்தை இயக்க உள்ளதாகவும், இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு இவ்வருட இறுதியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அவ்வப்போது சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் அட்லி, புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருவார். இந்த நிலையில் தற்போது அவருடைய புதிய ஹேர்ஸ்டைல் கொண்ட புகைப்படம் ஒன்று அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ஹேர்ஸ்டைல் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய ஸ்டைலில் அட்லி ஸ்டைலிஷாக இருப்பதாக பலர் கமெண்ட்ஸ் பதிவு செய்துவருகின்றனர். மேலும் இந்த புகைப்படத்தை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் லைக்ஸ் செய்துள்ளனர் என்பதும் அதில் ப்ரியா அட்லியும் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ஒரு சிலர் அட்லியின் இந்த ஹேர்ஸ்டைலை கிண்டல் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.