close
Choose your channels

'இப்படி ஒரு போரை இந்த உலகம் இதுவரை பார்த்திருக்காது': தமிழில் ரிலீசாகும் அக்சயகுமார் படத்தின் டிரைலர்..!

Thursday, March 28, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகி உள்ள ’படே மியான் சோட்டே மியான்’ என்ற படம் ஏப்ரல் 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த படம் தமிழில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் தமிழ் டிரைலர் தற்போது வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

அக்சயகுமார் நாயகனாகவும் சோனாக்ஷி சின்ஹா நாயகியாகும் நடித்துள்ள இந்த படத்தில் பிரித்விராஜ், மனுஷி சில்லார் உள்பட பலர் நடித்துள்ளனர். அப்பாஸ் ஜாபர் என்பவர் இயக்கத்தில் உருவாகிய இந்த படத்திற்கு விஷால் மிஸ்ரா இசை அமைத்துள்ளார்

மூன்று நிமிடங்களுக்கு மேல் இந்த படத்தின் டிரைலரை பார்க்கும்போது இது ஒரு அதிரடி ஆக்சன் படம் மட்டுமின்றி வித்தியாசமான சயின்டிஃபிக் கதையாகவும் இருக்கும் என்றும் நிச்சயம் இந்த படம் அக்சயகுமாருக்கு மேலும் ஒரு வெற்றிப்படமாக அமையும் என்றும் கூறப்படுகிறது

’இப்படி ஒரு உலகத்தை இந்த உலகம் பார்த்து இருக்காது’ போன்ற ஆவேசமான வசனம், பிரம்மாண்டமான காட்சி அமைப்புகள், சைக்கோ வில்லனின் கொடூரங்கள், சைக்கோ வில்லனை அடக்குவதற்காக அக்சயகுமார் எடுக்கும் அவதாரம், அவர் எப்படி இந்த உலகத்தை காப்பாற்றுகிறார் போன்ற காட்சிகள் டிரைலரில் இடம் பெற்றுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.