close
Choose your channels

டப்பிங் பணியை முடித்த 'பீஸ்ட்' நாயகி: வைரல் புகைப்படங்கள்!

Saturday, December 4, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகையான பூஜா ஹெக்டே தற்போது தளபதி விஜய் நடித்து வரும் ’பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் மூலம் அவர் நீண்ட இடைவெளிக்குப்பின் தமிழ் திரையுலகில் ரீஎன்ட்ரி ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வெளியான பின்பு பூஜா ஹெக்டேவுக்கு தமிழ் திரையுலகில் அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் பிரபாஸ் நடித்துவரும் ’ராதே ஷ்யாம்’ சிரஞ்சீவி நடித்து வரும் ’ஆச்சாரியா’ உள்பட ஒரு சில தெலுங்கு படங்களிலும் சில ஹிந்திப் படங்களிலும் பூஜா ஹெக்டேநடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிரபாஸுடன் பூஜா ஹெக்டே நடித்துவரும் ’ராதே ஷ்யாம்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து தற்போது பூஜா ஹெக்டே தனது பகுதியின் டப்பிங் பணியை முடித்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த புகைப்படங்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் யூவி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த படம் சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் இந்த படம் உருவாகியுள்ளது என்பதும் இந்த படம் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.