close
Choose your channels

'டாக்டர்' பாணியில் தான் 'பீஸ்ட்' பாடல்களும்... லீக்கான தகவல்

Sunday, April 3, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நெல்சன் இயக்கிய 'டாக்டர்’ படத்தின் பாணியில்தான் ‘பீஸ்ட்’ படத்திலும் பாடல்கள் இருக்கும் என்று லீக் ஆகி இருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான 'டாக்டர்’ திரைப்படத்தின் கதை தொடங்கும் முன்பே சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகனுகு ஒரு பாடலும், அதன் பின்னர் படம் முடியும்போது ஒரு பாடலும் இடம் பெற்றிருக்கும் என்பது தெரிந்ததே.

அதேபோல் ‘பீஸ்ட்’ படத்திலும் தீவிரவாதிகள் மால் கட்டிடத்தை ஹைஜாக் செய்யும் முன்பே விஜய், பூஜா ஹெக்டேவின் அரபிக்குத்து பாடல் இடம்பெறும் என்றும் அதே போல் படம் முடியும்போது டைட்டிலின் போது ஜாலியோ ஜிம்கானா பாடல் இடம்பெறும் என கூறப்படுகிறது. இடையில் சண்டை காட்சிகளின்போது Meaner.. Leaner.. Stronger என்ற பாடல் ஆங்காங்கே இருக்கும் என்று கூறப்படுகிறது.

மால் கட்டிடத்தை தீவிரவாதிகள் ஹைஜாக் செய்த பிறகு விறுவிறுப்பாக ஒட்டுமொத்த ஆக்ஷன் காட்சிகள் இருக்கும் என்பதால் இடையில் பாடல்கள் இல்லை என்ற தகவல் விஜய் ரசிகர்களுக்கு ஆச்சர்யமான ஒன்றாகதான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.