close
Choose your channels

'பிச்சைக்காரன் 2' படத்திற்கு முன்பே ரிலீஸ் ஆகும் விஜய் ஆண்டனியின் இன்னொரு படம்..!

Saturday, March 11, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் ஆண்டனி நடித்து, இசை அமைத்து, எடிட்டிங் செய்து இயக்கிய ‘பிச்சைக்காரன் 2’ என்ற திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்திற்கு முன்பே விஜய் ஆண்டனியின் இன்னொரு படம் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகிய திரைப்படங்களில் ஒன்று ’தமிழரசன்’. பாபு யோகேஸ்வரன் என்பவரது இயக்கத்தில் உருவான இந்த படத்தில் ரம்யா நம்பீசன், ராதா ரவி, சுரேஷ் கோபி, சோனு சூட், சாயா சிங், சங்கீதா, முனிஸ்காந்த், ரோபோ சங்கர், யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பே ரிலீசுக்கு தயாரானது என்பதும் இந்த படத்தின் டிரைலர் கடந்த டிசம்பர் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் ஆண்டனி போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் இந்த படம் த்ரில் மற்றும் சஸ்பென்ஸ் கதையம்சம் கொண்டது என்றும் கூறப்படுகிறது. இசைஞானி இளையராஜா இசையமைத்த இந்த படம் மார்ச் 31ஆம் தேதி வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 14 என அடுத்தடுத்த இரண்டு வாரங்களில் இரண்டு விஜய் ஆண்டனி திரைப்படங்கள் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.