close
Choose your channels

'கடைக்குட்டி சிங்கம்' படத்திற்கு எதிராக 'பீட்டா': திரையுலகினர் ஆவேசம்

Wednesday, July 25, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கார்த்தி, சாயிஷா நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய 'கடைக்குட்டி சிங்கம்' திரைப்படத்தை குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் திரையரங்கில் கண்டு ரசித்து வருகின்றனர். இந்த படத்தில் உள்ள பல காட்சிகள் நம்முடைய வீட்டில் நடந்தது போலவே இருப்பதாக பல ரசிகர்கள் கருத்து கூறி வருவதால் குடும்ப ஆடியன்ஸ்கள் குவிந்து வருகின்றனர். குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற ரேக்ளா ரேஸ் காட்சி ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தது.

ஆனால் இந்த படத்திற்கு 'பீட்டா' அமைப்பு எதிர்ப்பு தெரிவித்ததாகவும், விலங்குகள் நல வாரியம் இந்த படத்திற்கு தடையில்லா சான்றிதழ் வழங்கக்கூடாது என்று கூறியதாகவும் செய்திகள் வெளிவந்தது. இதுகுறித்து இயக்குனர் பாண்டிராஜ், சமீபத்தில் நடந்த இந்த படத்தின் வெற்றிவிழாவில் 'பீட்டா' அமைப்பு குறித்து காட்டமாக சில கருத்துக்களை தெரிவித்தார்.

இந்த நிலையில் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்திற்கு வழங்கிய தடையில்லா சான்றிதழை ரத்து செய்யக்கோரி விலங்குகள் நல வாரியத்திற்கு பீட்டா அமைப்பு கடிதம் எழுதியுள்ளது. இந்தியாவின் துணை ஜனாதிபதியே பாராட்டிய ஒரு படத்திற்கு, முறைப்படி சென்சார் சான்றிதழ் பெற்ற ஒரு படத்திற்கு பீட்டா அமைப்பு எதிர்ப்பு தெரிவித்திருப்பது திரையுலகினர்களை ஆவேசமடைய செய்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.