close
Choose your channels

'பாரதி கண்ணம்மா' நடிகைக்கு ஆண்குழந்தை: வித்தியாசமான புகைப்படம் வைரல்!

Tuesday, November 16, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாரதி கண்ணம்மா’ சீரியலில் வெண்பா என்ற கேரக்டரில் நடித்து வந்த ஃபரீனாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது என்பதை அவர் தனது சமூக வலைத்தளத்தில் வித்தியாசமாக பதிவு செய்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியலில் ஒன்று ’பாரதி கண்ணம்மா’என்பதும் ரோஷினி நாயகியாக நடித்து வந்த இந்த சீரியலில் வில்லி வெண்பா என்ற கேரக்டரில் ஃபரீனா நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் ரகுமான் என்பவரை திருமணம் செய்துகொண்ட ஃபரீனா கர்ப்பமாக இருந்தார் என்பதும் கர்ப்பமாக இருக்கும் போது அவர் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக வித்தியாசமான புகைப்படம் ஒன்றை ஃபரீனா பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.