close
Choose your channels

இந்த வாரம் எலிமினேஷன் ஆனவர் இந்த போட்டியாளர் தான்!

Friday, December 17, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் நாமினேசன் செய்யப்படுபவர் குறித்த தகவல் வெளியாகும் என்றும் அதில் குறைந்த வாக்குகள் அடிப்படையில் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை வெளியேற்றப்படுவார் என்பதும் தெரிந்ததே.

கடந்த திங்கட்கிழமை அன்று அனைத்து போட்டியாளர்களும் நாமினேஷன் செய்யப்படுவதாக பிக்பாஸ் அறிவித்து இருந்தார் என்பதும் ஆனால் இந்த வாரம் முழுவதும் நடந்த டாஸ்க்கில் வெற்றி பெற்றவர் நாமினேஷனில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்றும் பிக்பாஸ் கூறியிருந்தார். 

அந்த வகையில் சிபி, நிரூப், சஞ்சீவ், தாமரை, அமீர் ஆகியோர் நாமினேஷனில் இருந்து விடுவிக்கப்பட நிலையில் அபினய், பிரியங்கா, பாவனி, வருண், அக்சரா மற்றும் ராஜூ ஆகிய 6 பேர் நாமினேஷன் செய்யப்பட்டதாக பிக்பாஸ் அறிவித்தார்.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி இந்த வாரம் நாமினேஷன் செய்யப்பட்டவர்களில் ஒருவரான அபினய் எலிமினேட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.