close
Choose your channels

பிக்பாஸ் சென்றாயனுக்கு கிடைத்த மிகப்பெரிய மகிழ்ச்சி!

Sunday, February 10, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான சென்றாயனின் வெகுளித்தனம் அனைவர் மனதையும் கவர்ந்தது என்பது தெரிந்ததே. குறிப்பாக சென்றாயன் தனது மனைவி கர்ப்பமாக இருந்த செய்தியை கேட்ட சந்தோஷத்தில் துள்ளிக்குதித்த காட்சி இன்னும் பலருக்கு நினைவிருக்கும்

இந்த நிலையில் சென்றாயனுக்கு தற்போது ஆண்குழந்தை பிறந்துள்ளது. இன்று சென்றாயனின் மனைவி கயல்விழி ஆண்குழந்தையை பெற்றெடுத்ததாகவும் தாயும் சேயும் நலம் என்றும் சென்றாயன தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

சென்றாயன் நண்பரும் அவர் நடித்தாஅ 'மூடர் கூடம்' என்ற படத்தை இயக்கியவருமான இயக்குனர் நவீன், சென்றாயனுக்கு தனது டுவிட்டர் பக்க்த்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர், 'தம்பி சென்றாயனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும்' என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.