close
Choose your channels

வைரலாகும் 'இடுப்பு' புகழ் மீராவின் நடன வீடியோ

Friday, July 26, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேரன் தன்னுடைய இடுப்பை பிடித்து இழுத்ததாகவும், அதில் ஒரு உள்நோக்கம் இருந்ததாகவும், சேரன் கெட்ட எண்ணத்துடன் இதனை செய்ததால் மற்ற போட்டியாளர்களுக்கும் இதனை தெரிவிக்க வேண்டும் என்று தான் விரும்பியதாகவும் ஒரு பஞ்சாயத்தை மீராமிதுன் கிளப்பினார். மீராவுக்கு தினமும் ஒருவர் மீது பழியை போடாவிட்டால் அன்றிரவு தூக்கம் வராது. நேற்று அவரிடம் சிக்கியது சேரன்.

உண்மையில் அந்த டாஸ்க்கின்போது சேரன் மீராவை பிடித்து இழுத்தபோது எந்தவித சங்கடமும் இன்றி மீரா சிரித்து கொண்டே தான் இருந்தார். ஒருவர் கெட்ட எண்ணத்துடன் இடுப்பை பிடித்தது தெரிந்தால் உடனே அவரது முகம் மாறியிருக்கும். குறைந்தபட்சம் ஒரு முறைப்பு செய்தாவது தனது எதிர்ப்பை காண்பித்திருப்ப்பார். ஆனால் சேரன் பிடித்து இழுத்தபோது சிரித்தபடி டாஸ்க்கை தொடர்ந்த மீரா, அதன்பின்னர் யோசித்து சேரன் மீது வேண்டுமென்றே பழிபோட்டதாக பார்வையாளர்கள் கருதுகின்றனர். முதலில் கெட்ட எண்ணத்துடன் தன்னை பிடித்து இழுத்ததாக கூறிவிட்டு பின் அனைத்து போட்டியாளர்களும் அவரை கண்டிக்க தொடங்கிய பின், தான் அந்த நேரத்தில் கீழே விழுந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்றும், தான் தவறான எண்ணத்தில் சேரன் மீது பழிபோடவில்லை என்றும் திடீரென பல்டி அடித்தார்.

இந்த நிலையில் மீராவின் பழைய நடன வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது. சக நடனக்கலைஞர் பலமுறை அவரது இடுப்பை பிடித்து நடனம் ஆடும்போது ஒரு உணர்ச்சியையும் காட்டாமல் நடனம் ஆடியது அந்த வீடியோவில் தெரிகிறது. இப்படியெல்லாம் நடனமாடிவிட்டு, ஒரு அப்பா ஸ்தானத்தில் உள்ள ஒருவர் இடுப்பை பிடித்தார் என்று குற்றஞ்சாட்டுவது, மீராவின் கெட்ட குணத்தை வெளிப்படுத்துவதாகவே தெரிகிறது.

எனவே இந்த வாரம் பார்வையாளர்களின் கோபத்தால் மீரா வெளியேறுவது கிட்டத்தட்ட உறுதியாக தெரிகிறது. அதையும் மீறி பிக்பாஸ் அவரை காப்பாற்றுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். குறைந்தபட்சம் ஒரு குறும்படம் போட்டு மீராவின் முகத்திரையை கிழிக்க வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாக உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.