close
Choose your channels

சீமானை கட்டிப்பிடித்து முத்தமிட்ட பிக்பாஸ் டைட்டில் வின்னர்.. என்ன சொல்லியிருக்கிறார் பாருங்கள்..!

Wednesday, February 22, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் டைட்டில் பட்டம் வென்ற அசீம், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்தித்த புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் வெற்றியாளர் விக்ரமன்தான் என்று அனைவரும் எண்ணிக் கொண்டிருந்த நிலையில் திடீர் திருப்பமாக அசீம் டைட்டில் வின்னர் என அறிவிக்கப்பட்டது. இது பெரிய சர்ச்சையான நிலையில் அசீம் மற்றும் விக்ரமன் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் மோதி வருகின்றனர்.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனை சந்தித்து விக்ரமன் ஆசி பெற்றதை ஏற்கனவே பார்த்தோம். அந்த வகையில் தற்போது பிக்பாஸ் டைட்டில் பட்டம் வென்ற அசீம், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்தித்து அவரை கட்டிப்பிடித்து முத்தமிட்ட புகைப்படத்தை தனது சமூகத்தஅத்தில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவுக்கு ஏராளமான லைக்ஸ் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

மேலும் இந்த பதிவில் அசீம் தெரிவித்துள்ளதாவது: எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே இங்குப் பிறப்பினும் அயலான் அயலானே" கொள்கை, கோட்பாடு, தத்துவத்தையெல்லாம் தாண்டிய உறவிது !! என்றும் அண்ணன் சீமானின் அன்பு தம்பி தான் நான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.