close
Choose your channels

'பிகில்' ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு

Thursday, October 17, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வரும் தீபாவளி தினத்தில் விஜய்யின் ‘பிகில்’ மற்றும் கார்த்தியின் ’கைதி’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் மட்டுமே வெளியாக உள்ள நிலையில் இரண்டு திரைப்படங்களும் சென்சார் சான்றிதழ் பெற்று ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது

இந்த நிலையில் கார்த்தியின் ’கைதி’ திரைப்படம் அக்டோபர் 25-ஆம் தேதி வெள்ளிக்கிழமை ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அந்த படத்தின் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு அவர்கள் அறிவித்துள்ளார். இதனை அடுத்து இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த சர்ச்சை முடிவுக்கு வந்தது

இந்த நிலையில் விஜய்யின் பிகில் படமும் அக்டோபர் 25ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அக்டோபர் 25-ஆம் தேதி ஒரு திரைப்படமும் அக்டோபர் 27-ஆம் தேதி ஒரு திரைப்படமும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ஒரே தேதியில் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இருப்பினும் கடந்த பொங்கல் தினத்தில் ரஜினியின் பேட்ட மற்றும் அஜித்தின் விஸ்வாசம் ஆகிய இரண்டு திரைப்படங்களும் வெளியாகி இரண்டும் வெற்றி பெற்றது போல் வரும் தீபாவளி அன்று வெளியாகும் பிகில், கைதி ஆகிய இரண்டு திரைப்படங்களும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.