close
Choose your channels

நடன இயக்குனர் பிருந்தா இயக்கும் 'ஹே சினாமிகா' படம் குறித்த முக்கிய அறிவிப்பு

Wednesday, March 18, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடன இயக்குனர் பிருந்தா இயக்குராக அறிமுகமாக இருக்கும் படம் ‘ஹே சினாமிகா’. துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதிராவ் ஹைத்ரி நடிக்கும் இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

ஜியோ ஸ்டுடியோஸ்‌ & குளோபல்‌ ஒன்‌ ஸ்டுடியோஸ்‌ தயாரிப்பில்‌, மதன்‌ கார்க்கி எழுத்தில்‌, நடன இயக்குனர்‌ பிருந்தா இயக்க, துல்கர்‌ சல்மான்‌, காஜல்‌ அகர்வால்‌, அதிதிராவ் ஹைத்ரி நடிப்பில்‌ உருவாகி வரும்‌ 'ஹே சினாமிகா' திரைப்பட படப்பிடிப்பு வேலைகள்‌ சமீபத்தில் துவங்கிய நிலையில்‌. உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும்‌ கொரோனா வைரஸ்‌ பாதிப்பால் பெப்சி மற்றும்‌ அரசாங்க அறிவுறுத்தலுக்கு இணங்க, படப்பிடிப்பு வேலைகள்‌ நாளை 1ம்‌ தேதி முதல்‌ தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில்‌, மக்கள்‌ அனைவரும்‌ பாதுகாப்புடன்‌ இருக்க வேண்டியும்‌, பாதிப்படைந்தவர்கள்‌ விரைவில்‌ பூரண குணமடைய வேண்டியும்‌, அரசாங்கம்‌ மற்றும்‌ மருத்துவர்களின்‌ அறிவுறுத்தலின்‌படியும்‌ நடக்குமாறு கேட்டுக்‌ கொள்கிறோம்‌. மீண்டும்‌ படப்பிடிப்பு வேலைகள்‌ பெப்சி மற்றும்‌ அரசாங்க அனுமதியுடன்‌ தொடரும்‌ என்பதையும்‌ தெரிவித்துக்‌ கொள்கிறோம்‌.

இவ்வாறு அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.