close
Choose your channels

கொரோனா பாசிட்டிவ்வை பாசிட்டிவ்வாக எடுத்து கொண்ட நடிகர்-தயாரிப்பாளர்!

Wednesday, September 16, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் திரையுலக பிரபலங்களையும் பாரபட்சமின்றி தாக்கி வருகிறது என்பது குறித்த செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம். இந்த நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, பவன் கல்யாண் ஆகியோர்களின் சகோதரரும் நடிகருமான நாகபாபு என்பவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

கடந்த சில நாட்களாக நாகபாபு அவர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததாகவும் இதனை அடுத்து அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

நடிகர் நாகபாபு பல படங்களில் குணச்சித்திரம் மற்றும் வில்லன் கேரக்டரில் நடித்தவர் என்பது மட்டுமன்றி இவர் தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இவருடைய மகன் வருண் தேஜ் மற்றும் மகள் நிஹாரிகா ஆகியோர் திரையுலகில் நடித்து கொண்டிருக்கின்றனர் என்பதும் விஜய் சேதுபதி நடித்த ’ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ என்ற திரைப்படத்தில் நிஹாரிகா நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தனக்கு கொரோனா என்றதும் நாகபாபு பயப்படாமல் அதையே அவர் பாசிட்டிவாக எடுத்துள்ளார். நான் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதால் நான் சீக்கிரம் பிளாஸ்மா தானம் செய்ய தகுதியாகிவிடுவென் என்று அவர் கூறியுள்ளது கொரோனா பாசிட்டிவ்வை அவர் பாசிட்டிவாக எடுத்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.