close
Choose your channels

பாஜகவில் இருந்து விலகி அமமுகவில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்!

Friday, March 12, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கர்நாடக இசைக் கலைஞரான மோகன் வைத்யா பிக்பாஸில் கலந்து கொண்டு ஒரு முக்கிய பிரபலமாக அறியப்பட்டார். இவர் கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் தன்னை பாஜகவுடன் இணைத்து கொண்டார். அவர் தற்போது பாஜகவில் இருந்து விலகி டிடிவி தினகரன் தலைமையில் செயல்படும் அமமுகவில் இணைந்துள்ளார். மேலும் வரும் சட்டப்பேரவை தேர்தலுக்காக மோகன் வைத்யா அமமுக சார்பில் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்றும் கூறப்படுகிறது.

சமீபகாலமாக பாஜகவில் இணையும் சினிமா பிரபலங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் நடிகை குஷ்பு, நடிகர் ராதாரவி, கவுதமி, நமிதா, பொன்னம்பலம், ஆர்.கே.சுரேஷ், ஆர்த்தி, காயத்ரி ரகுராம், விஜயகுமார், இயக்குநர் பேரரசு எனப் பலரும் பாஜகவில் இணைந்த நிலையில் நேற்று பிரபல நகைச்சுவை நடிகர் செந்திலும் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார்.

இந்நிலையில் பாஜகவில் செயல்பட்டு வந்த மோகன் வைத்யா திடீரென  அக்கட்சியில் இருந்து விலகி அமமுகவில் இணைந்துள்ளார். மேலும் அமமுகவில் ஏற்கனவே நடிகர் ரஞ்சித் மற்றும் விக்னேஷ் ஆகியோர் செயல்பட்டு வரும் நிலையில் இன்னொரு சினிமா பிரபலமாக மோகன் வைத்யா இணைந்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.