close
Choose your channels

தீபாவளியை சிறப்பித்த பிரபலங்கள்… கண்கவரும் கலர்ஃபுல் புகைப்படங்கள்!

Friday, November 5, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்த ஆண்டு “தீபஒளி“ திருநாளை இந்தியப் பிரபலங்கள் பலரும் கோலாகலமாக கொண்டாடியுள்ளனர். கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை வருடம், கடும் அழுத்தத்தில் இருந்த பலரும் தற்போது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளனர். இந்தக் கட்டத்தில் தீபவாளி வந்ததை அடுத்து பொதுமக்களும் கடும் உற்சாகத்துடன் பண்டிகையை சிறப்பித்து உள்ளனர்.

அந்த வகையில் தமிழ் சினிமா மற்றும் பிற மொழி பிரபலங்கள் தீபாவளியை முன்னிட்டு பதிவிட்ட புகைப்படங்களின் தொகுப்பு. கூடவே அவர்கள் பதிவிட்ட சில வாழ்த்து செய்திகளும் இங்கு தொகுக்கப்பட்டு இருக்கிறது.

1.தமிழ் சினிமாவில் தளபதி விஜய்க்கு ஜோடியாக அறிமுகமாகி பின்பு பாலிவுட் தற்போது ஹாலிவுட் சினிமா எனக் கலக்கிக் கொண்டு இருக்கும் நடிகை பிரியங்கா சோப்ரா தனது காதல் கணவர் நிக் ஜோனாஸுடன் தீபாவளியை பண்டிகையை கொண்டாடியுள்ளார். இந்தப் புகைப்படத்தில் பாப் பாடகரான நிக் ஜோனாஸும் இந்திய முறைப்படி வழிபாடுகளில் ஈடுபட்டு இருப்பது பார்ப்பதற்கு சுவாரசியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

2.தமிழ் சினிமாவில் 80கள் முதல் முன்னணி நடிகையாக கொடிக்கட்டி பறந்து வருபவர் நடிகை குஷ்பு. இவர் தனது கணவர் பிரபல இயக்குநர் சுந்தர்.சியுடன் இணைந்து தீபாவளியைச் சிறப்பித்துள்ளார். நட்சத்திர ஜோடிகளான குஷ்பு-சுந்தர்.சி தீபவாளி ஸ்பெஷல் புகைப்படம்.

3. தமிழ் சினிமாவில் முக்கிய நட்சத்திர தம்பதிகளான பிரசன்னா- சினேகா தங்களுடைய குழந்தைகளுடன் கோலாகலமாக தீபாவளியை கொண்டாடி உள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரே வண்ணத்தில் ஆடை உடுத்தியிருப்பது மேலும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

4. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் ஸ்ரேயா சரண் தன்னுடைய காதல் கணவர் அன்ரீவ் கோஸ்சீவ்புடன் தீபாவளியை கொண்டாடியுள்ளார்.

5. தமிழ் சினிமாவில் நடித்து பிரபலமான நடிகை சமீரா ரெட்டி தனது கணவர் அக்ஷய் வர்தே மற்றும் குழந்தைகள் ஹன்ஸ், நைராவுடன் தீபாவளியை சிறப்பித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.

6. பீஸ்ட் படத்தில் தளபதியுடன் நடித்துவரும் நடிகை பூஜா ஹெக்டே தனது குடும்பத்தினருடன் தீபாவளியை சிறப்பித்த புகைப்படம்.

7.நடிகர் விஜய்குமார்- மஞ்சுளா ஜோடியின் கடைசி மகளான ஸ்ரீதேவி விஜய்குமார் தனது கணவர் ராகுல், குழந்தை ரூபிகாவுடன் தீபாவளியை கொண்டாடியுள்ளார்.

8. தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளான சரத்குமார்- ராதிகா தம்பதியினர் தீபாவளியை சிறப்பித்ததோடு புகைப்படங்களையும் வெளியிட்டு உள்ளனர்.

9. நடன நிகழ்ச்சியில் அறிமுகமாகி தற்போது தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக வளர்ந்திருப்பவர் நடிகை சாய் பல்லவி. அவர் தனது தங்கை மற்றும் குடும்பதினருடன் தீவாளியை சிறப்பித்த புகைப்படம்.

10. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்திருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தீபாவளிக்காக சிவப்பு நிறத்தில் நீளமான உடையை அணிந்து புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.

11. உலகநாயகன் கமல்ஹாசனின் மகளும் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையுமான நடிகை ஸ்ருதி ஹாசன் தனது காதலர் சாந்தனு ஹசாரிகாவுடன் தீபாவளியை சிறப்பித்துள்ளார்.

12. மாஸ்டர் படத்தில் தளபதிக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் தீபாவளி முன்னிட்டு அழகிய புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.

13. தெலுங்கு, இந்தி சினிமாக்களில் முன்னணி நடிகையாகவுள்ள நடிகை இலியானா தளபதியின் “நண்பன்“ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார். இவர் தற்போது தீபாவளிக்காக கலர்ஃபுல் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.

14. தமிழில் வெளியான “காற்று வெளியிடை“, “செக்கசிவந்தவானம்“ போன்ற திரைப்படங்களில் நடித்து ரசகர்களிடையே பிரபலமானவர் நடிகை அதிதி ராவ் ஹைதாரி. இவர் தீபாவளியை முன்னிட்டு அழகிய பட்டு சேலை உடுத்தி புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

15. சமீபத்தில் தமிழ் ரசிகர்களை அதிகம் ஈர்த்த நடிகை பிரியா பவானி சங்கர். இவர் தீபாவளியை முன்னிட்டு தனது அம்மாவின் விருப்பமான “மேட்ரிமோனியல் போஸ்“ புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டு உள்ளார். அழகிய பிங்க் பட்டு சேலையில் இருக்கும் இந்தப் புகைப்படம் ரசிகர்களை அதிகம் ஈர்த்திருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.