close
Choose your channels

'இந்தியன் 2' படத்தின் செட் இதுதானா? பிரபல ஒளிப்பதிவாளரின் பதிவு

Sunday, December 30, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகவுள்ள 'இந்தியன் 2' திரைப்படத்தின் செட் அமைக்கும் பணி நடைபெற்று வருவது தெரிந்ததே. முத்துராஜ் கலை இயக்கத்தில் இந்த படத்திற்காக பிரமாண்டமான செட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி முடிந்தவுடன் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது.

இந்த நிலையில் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் 'இந்தியன் 2' படத்தின் செட்டில் ஷங்கர் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். பழங்கால தோற்றத்தில் தத்ரூபமாக இந்த செட் அமைந்துள்ளது.

இந்த படத்தில் கமல்ஹாசனுடன் முதல்முறையாக காஜல் அகர்வால் இணைந்து நடிக்கவுள்ளார். அனிருத் இசையில் உருவாகவுள்ள இந்த படம் வரும் 2020ஆம் ஆண்டு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.