close
Choose your channels

வடிவேலுவுடன் இணைந்து நடித்த கோலிவுட் காமெடி நடிகர் காலமானார்

Monday, October 7, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வைகைப்புயல் வடிவேலுவுடன் இணைந்து பல திரைப்படங்களில் காமெடி கேரக்டர்களில் நடித்த நடிகர் கிருஷ்ணமூர்த்தி இன்று காலமானார். அவருக்கு கோலிவுட் திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இன்று காலை நடிகர் கிருஷ்ணமூர்த்தி குமுளி அருகே ஒரு படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது திடீரென மரணம் அடைந்ததாக தெரிகிறது. நடிகர் கிருஷ்ணமூர்த்தியை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.

இயக்குனர் பாலாவின் ‘நான் கடவுள்’ உள்பட பல திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடத்தில் நடிகர் கிருஷ்ணமூர்த்தி நடித்துள்ளார். குறிப்பாக வடிவேலுடன் இணைந்து ’தவசி’ உள்பட பல படங்களில் இவர் நடித்த காமெடி காட்சிகள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.