close
Choose your channels

'குக் வித் கோமாளி' போட்டியாளருக்கு திருமணம்.. மணக்கோலத்தில் உள்ள புகைப்படம் வைரல்

Sunday, November 20, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவி சீரியல்களிலும் ’குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராக இருந்தவருமான ரித்திகாவுக்கு திருமணம் என்று நடந்து உள்ளதை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி என்ற சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வருபவர் ரித்திகா. இந்த கேரக்டர் மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒரு சில எபிசோடுகள் மட்டும் வந்தாலும் அவர் பார்வையாளர்களின் மனதை கவர்ந்தார்.

இந்த நிலையில் ரித்திகாவுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் இன்று அவர் வினோ என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் உறவினர்கள் நண்பர்கள் மற்றும் திரையுலகினர் பலர் கலந்து கொண்டனர் மேலும் ரித்திகாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நவம்பர் 27ஆம் தேதி நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரித்திகா தனது கணவருடன் கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு தன்னை ஆசிர்வதிக்கும்படி கேட்டு கொண்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு லட்சக்கணக்கில் லைக்ஸ் குவிந்து வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.