close
Choose your channels

'குக் வித் கோமாளி' கனியின் குடும்ப புகைப்படங்கள் வைரல்!

Sunday, March 28, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள குக்குகள் மற்றும் கோமாளிகள் மக்கள் மனதில் இடம் பெற்றுள்ளார்கள். குறிப்பாக இந்நிகழ்ச்சியின் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றவர்களில் ஒருவரான கனி, மக்கள் மனதில் மிக ஆழமாக இடம்பிடித்துவிட்டார் என்பதும் தெரிந்ததே.

ஏற்கனவே அமரர் கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ என்ற நாவலை யூடியூபில் தொகுத்து வழங்கி வரும் கனி, அவ்வப்போது சமையல் குறிப்புகளையும் செய்து வருகிறார். இருப்பினும் இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் அவர் மிகப் பெரிய அளவில் பிரபலமாகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கனியின் தந்தை தேசிய விருது பெற்ற இயக்குனர் அகத்தியன் என்பதும் இவரது கணவர் திரு அவர்களும் திரைப்பட இயக்குனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. விஷால் நடித்த ‘தீராத விளையாட்டு பிள்ளை’ ’சமர்’ ’நான் சிகப்பு மனிதன்’ கார்த்திக் மற்றும் கெளதம் கார்த்திக் நடித்த ‘மிஸ்டர் சந்திரமௌலி’ மற்றும் ’சாணக்கியா’ என்ற தெலுங்கு படத்தையும் இயக்குனர் திரு இயக்கி உள்ளார்.

திரு-கனி தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கனி தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. அந்த புகைப்படங்களை வழக்கம்போல் நெட்டிசன்கள் ரசித்துப் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.