close
Choose your channels

'குக் வித் கோமாளி' டைட்டில் வின்னருக்கு பரிசு இத்தனை லட்சமா? இதுவரை இல்லாத தொகை!

Sunday, July 24, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ’குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பார்வையாளர்கள் மத்தியில் பெற்று வருகிறது என்பதும் தற்போது நடந்து வரும் மூன்றாவது சீஸனின் இறுதிப்போட்டி இன்று விஜய் டிவியில் 5 மணிநேரம் ஒளிபரப்பாக உள்ளது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் குக் வித் கோமாளி சீசன் 3 டைட்டில் வின்னர் மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தி ஸ்ருதிகா என்று செய்திகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் அவருக்கு ரூபாய் 10 லட்சம் பரிசு கிடைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது

கடந்த இரண்டு சீசன்களில் டைட்டில் வின்னர் வென்ற வனிதா மற்றும் கனி ஆகிய இருவருக்குமே ஐந்து லட்சம் மட்டுமே பரிசுத்தொகை கொடுக்கப்பட்ட நிலையில் இந்த முறை பரிசுத்தொகை இரு மடங்காகி உள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடம் பிடித்த போட்டியாளர்கள் யார் என்பது இதுவரை தகவல் வெளிவரவில்லை என்றும் ஆனாலும் அவர்களுக்கும் பரிசு தொகை கணிசமாக வழங்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.