close
Choose your channels

தளபதி விஜய் வேடத்தில் கெத்துக் காட்டும் டேவிட் வார்னர்… வைரல் வீடியோ!

Thursday, February 18, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆஸ்திரேலிய அணியின் துவக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் ஹைத்ராபாத் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக இருந்து ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார். இதனால் இந்திய ரசிகர்களை அதிமாகக் கொண்ட டேவிட் வார்னர் கொரோனா காலத்தில் தனது ரசிகர்களோடு சமூக வலைத்தளத்தில் உரையாடியும் வருகிறார்.

இந்நிலையில் இந்திய சினமா மீது தாக்கம் கொண்ட டேவிட் தனது ரசிர்களுக்காக அவ்வபோது வீடியோவையும் பதிவிடத் தொடங்கினார். அப்படி டேவிட் வார்னர் தனது மனைவியுடன் ஆடி வெளியிட்ட ‘‘புட்டபொம்மா” பாடல் வீடியோ படு வைரலானது. இதையடுத்து இவர் தனது ரசிகர்களுக்கு பேஸ் ஆப் என்ற செயலியையும் அறிமுகப் படுத்தினார். மேலும் இந்த ஆப்பை வைத்து எடிட் செய்யப்பட்ட பல வீடியோக்களை பதிவிட்டு இந்திய ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தினார்.

இதனால் டேவிட் வார்னரை ஷாருக் முதல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரை பல்வேறு வேடங்களில் பார்க்க முடிந்தது. மேலும் பேஸ் ஆப் மூலம் எடிடிங் செய்யப்பட்ட அந்த கேரக்டர்களுக்கு வார்னரின் முகம் அச்சு அசலாகப் பொருந்தியது. இதனால் இந்திய சினிமா ரசிகர்கள் டேவிட் வார்னரின் வீடியோக்களுக்கு அடிமையாகவே மாறிவிட்டனர். சமீபத்தில் தர்பார் ரஜினியாக வந்த டேவிட் தற்போது மாஸ்டர் தளபதியாக வந்து இருக்கிறார். மாஸ்டர் படத்தின் பாடல் காட்சியோடு எடிட் செய்யப்பட்ட டேவிட் வார்னரின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் படு வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.