close
Choose your channels

'விஸ்வாசம்' படத்திற்காக டி.இமான் கொடுத்த போனஸ் பாடல்

Saturday, November 17, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'விஸ்வாசம்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தநிலையில் தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் இரவுபகலாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்தநிலையில் இசையமைப்பாளர் டி.இமான் இந்த படத்திற்காக ஒரு போனஸ் பாடலை கம்போஸ் செய்துள்ளார். இந்த பாடல் இந்த படத்தின் காட்சிகளின் பின்னணியில் ஒலிக்கவுள்ளது. பாடலாசிரியர் விவேகா எழுந்திய இந்த பாடல் இமான் ஸ்டைலில் உருவான ஒரு மெலடி பாடல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பாடலை தவிர இந்த படத்திற்காக இமான் ஐந்து பாடல்களை கம்போஸ் செய்துள்ளார்.

அஜித், நயன்தாரா, தம்பி ராமையா, விவேக், ரோபோசங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.