close
Choose your channels

பள்ளி காலத்திலேயே பாடகர்: பிரபல இசையமைப்பாளர் பகிர்ந்த புகைப்படம்!

Thursday, April 28, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர், தான் பள்ளி காலத்திலேயே இசையில் ஆர்வம் கொண்டு பாடகராக இருந்ததாக குறிப்பிட்டு அதுகுறித்த புகைப்படத்தை பதிவு செய்துள்ள் நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான ரஜினி, அஜீத், சூர்யா உள்பட பல பிரபல நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்து வருபவர் டி இமான். இவரது இசையில் உருவான மெலோடி பாடல்கள் மிகப் பெரிய அளவில் பிரபலமாகி வரும் என்பது தெரிந்ததே .

இந்த நிலையில் டி இமான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தான் பள்ளி காலத்தில் இருந்த போது இசைக்குழுவில் பாடிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மறைந்த இசையமைப்பாளர் ஆதித்யன் இசைக்குழுவில் அவர் பாடிய இந்த புகைப்படத்தை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

பள்ளிக் காலத்திலேயே இசையில் ஆர்வம் கொண்ட டி இமான் தற்போது முன்னணி இசையமைப்பாளராக இருப்பதில் எந்த விதமான ஆச்சரியம் இல்லை என ரசிகர்கள் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.