close
Choose your channels

பிறந்த நாள் விழாவில் டிடியை இறுக்கி அணைத்து இருப்பவர் யார்? வைரல் புகைப்படம்!

Tuesday, February 23, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தொலைக்காட்சி பிரபலம் டிடி என்ற திவ்யதர்ஷினி தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். அதில் ஒரு புகைப்படத்தில் டிடியை இறுக்கி அணைத்தபடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து ஒருவர் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி டிடி சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அவரது பிறந்தநாளுக்கு சக ஊழியர்கள் மற்றும் விஜய் டிவியில் பணிபுரிந்து வருபவர்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்த பிறந்தநாள் விழாவில் விஜய் டிவி புரோகிராம் ஹெட் அவர்களும் வந்ததாக தெரிகிறது. அவர் இந்த பார்ட்டியின்போது டிடியை இறுக்கி அணைத்தபடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் டிடி பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படம் குறித்து டிடி கேப்ஷனாக கூறியிருப்பதாவது: இந்த ஒரே ஒரு புகைப்படம் அனைத்தையும் கூறி விடும். எனது பாஸ்க்கு நன்றி. எனது நன்றியை நான் எங்கிருந்து தொடங்குவது என்று தெரியவில்லை. எனக்கு வார்த்தைகளே கிடைக்கவில்லை. என் நண்பர்களான கவிதா, அனு மற்றும் என் தம்பிகளான ரிச்சர்ட் ஜோஸ்வா, பிரியங்கா, பிரிட்டோ ஆகியோருக்கும் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

இதுபோன்ற சிறந்த ஆச்சரியம் வேறு எதையும் என்னால் பார்க்க முடியாது. என்னுடைய அழைப்பை ஏற்று என்னை வாழ்த்த வருகை தந்த அனைவருக்கும் நன்றி’ என்று தெரிவித்துள்ளார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.