close
Choose your channels

18 வருடங்களுக்கு முன் இருந்த அப்பாவி தனுஷ்: சகோதரி வெளியிட்ட புகைப்படம்!

Monday, March 15, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் தனுஷ் கடந்த 2002ம் ஆண்டு ’துள்ளுவதோ இளமை’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின் ’காதல் கொண்டேன்’ ’திருடா திருடி’ ’புதுப்பேட்டை’ ’பொல்லாதவன்’ ’படிக்காதவன்’, அசுரன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் இன்று தமிழ் திரையுலகின் மாஸ் நடிகர்களில் அவரும் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது அவர் தமிழில் மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தனுஷுடன் எடுத்த புகைப்படம் ஒன்றை அவருடைய சகோதரி டாக்டர் கார்த்திகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை தனுஷ் ரசிகர் ஒருவர் தனக்கு அனுப்பியதாகவும் இந்த புகைப்படம் எனக்கு பழைய ஞாபகங்களை வரவழைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள டாக்டர் கார்த்திகா, இந்த புகைப்படம் கடந்த 2003ஆம் ஆண்டு எடுத்தது என்றும் அப்போது தனுஷ் எவ்வளவு இளமையாகவும், அப்பாவியாகவும் உள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.