close
Choose your channels

தனுஷின் 'அசுரன்' படப்பிடிப்பு தொடங்கும் தேதி அறிவிப்பு

Monday, January 21, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய 'வடசென்னை' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் மீண்டும் தனுஷ், வெற்றிமாறன் ஒரு படத்தில் இணையவுள்ளதாகவும், அந்த படத்திற்கு 'அசுரன்' என்ற டைட்டில் வைக்கப்பட்டதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தின் கெட்டப்பில் தனுஷ் கடந்த சில நாட்களாக வலம் வந்து கொண்டிருந்த நிலையில் சற்றுமுன் 'அசுரன்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் தேதியை தனுஷ் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 26ஆம் தேதி குடியரசு தினத்தில் தொடங்கவுள்ளதாகவும், மற்றுமொரு புதிய அனுபவத்திற்கு தயாராகி வருவதாகவும் தனுஷ் தெரிவித்துள்ளார்.

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகவிருக்கும் இந்த படத்தில் நடிக்கும் நாயகி உள்பட மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.