close
Choose your channels

தனுஷின் 'ஜகமே தந்திரம்': டீசருடன் ரிலீஸ் குறித்த அறிவிப்பு!

Monday, February 22, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்த ’ஜகமே தந்திரம்’ திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாகும் என செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில் தற்போது அந்த செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது.

கார்த்திக் சுப்புராஜின் ’ஜகமே தந்திரம்’படம் நெட்பிளிக்ஸில் மிக விரைவில் வெளியாகும் என சற்றுமுன் அறிவிக்கப்பட்டதோடு, இந்த படத்தின் டீசரும் வெளியாகி உள்ளது. முழுக்க முழுக்க காமெடி மற்றும் ஆக்சனுடன் கூடிய கேரக்டரில் தனுஷ் நடித்து இருப்பது இந்த டீசரில் இருந்து தெரிகிறது. அதேபோல் கார்த்திக் சுப்புராஜின் டுவிஸ்டுகளும் ஆங்காங்கே இருக்கும் என்பது இந்த டீசரில் இருந்து தெரியவருகிறது

’ஜகமே தந்திரம்’ திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட தனுஷ் உள்பட பலர் கோரிக்கை வைத்த நிலையில் தற்போது ஓடிடியில் ரிலீஸ் செய்யப் போவது உறுதி செய்யப்பட்டுள்ளது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக உள்ளது.

தனுஷ், ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்த இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை சசிகாந்த் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.