வைரலாகும் தனுஷின் பழைய குடும்ப புகைப்படம்!
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரும், நடிப்பிற்காக தேசிய விருது பெற்று தமிழ் திரையுலகையே பெருமைப்படுத்தியவரும் தனுஷ் என்பது தெரிந்ததே. கோலிவுட்டில் மட்டுமின்றி பாலிவுட் ஹாலிவுட் என அவர் தனது நடிப்பு எல்லைகளை விரிவுபடுத்தி வருகிறார் என்பதும் சமீபத்தில் ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தனுஷ் தனது சகோதரிகள் மற்றும் சகோதரர் செல்வராகவனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது, தனது 2 சகோதரிகள் மற்றும் சகோதரர் செல்வராகவன் ஆகியவர்களுடன் தனுஷ் எடுத்த இந்த பழைய குடும்ப புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் மற்றும் தனுஷ் ரசிகர்கள் பாசிட்டிவ் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.
தனுஷ் நடித்த கர்ணன், ஜகமே தந்திரம் ஆகிய திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் அடுத்ததாக அவர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார். அவர் நடித்த பாலிவுட் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது என்பதும் விரைவில் அவர் நடிக்கவுள்ள ‘தி க்ரே மேன்’ என்ற ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
தனுஷின் கையில் அடுத்தடுத்து ஐந்துக்கும் மேற்பட்ட படங்கள் இருப்பதால் 2021ஆம் ஆண்டு தனுஷின் ஐந்து படங்கள் வெளியாக வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.