close
Choose your channels

ஹரிஷ் கல்யாண் அடுத்த பட நாயகி திடீர் மாற்றம்!

Monday, July 8, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஹரிஷ் கல்யாண் அதன் பின்னர் 'பியார் பிரேமா காதல்' மற்றும் 'இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்' என இரண்டு வெற்றிப்படங்களில் நடித்தார். தற்போது அவர் 'தனுசு ராசி நேயர்களே', 'கசடதபற', 'தாராள பிரபு' மற்றும் இயக்குனர் சசி இயக்கும் படம் என பிசியாக உள்ளார்.

இந்த நிலையில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் சஞ்சய் பாரதி இயக்கி வரும் 'தனுசு ராசி நேயர்களே' படத்தில் நாயகியாக ரியா சக்ரவர்த்தி நடிப்பதாக இருந்தது. ஆனால் தற்போது அவருக்கு பதிலாக நடிகை Digangana Suryavanshi நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே தெலுங்கில் சமீபத்தில் வெளிவந்த 'ஹிப்பி' என்ற படத்தில் நாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ரெபாமோனிகா, முனிஷ்காந்த், ரேணுகா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். கோகுலம் கோபாலன் தயாரித்து வரும் இந்த படம் இவ்வருட இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.