close
Choose your channels

ஆர்ஜே பாலாஜியின் பகுத்தறிவுக்கு காட்டமான பதில் கொடுத்த இயக்குனர்!

Sunday, March 3, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆர்.ஜே பாலாஜியின் 'எல்.கே.ஜி' திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி நல்ல வசூலையும் ரசிகர்களின் ஆதரவையும் பெற்று வெற்றிப்படமாகியுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் வெளியான புரமோஷன் வீடியோ ஒன்றில், பகுத்தறிவு குறித்த காட்சி ஒன்று உள்ளது. 'சாமி படங்களை அகற்றிவிட்டு பெரியார் போன்ற பகுத்தறிவு படங்களை கும்பிடுவது மட்டுமே பகுத்தறிவு' என்ற வசனமும் அதில் இடம்பெற்றுள்ளது.

இந்த காட்சிக்கு இயக்குனர் நவீன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் காட்டமான பதிலை அளித்துள்ளார். 'எல்.கே.ஜி' வெற்றிக்கு வாழ்த்துகள் சகோதரர் பாலாஜி அவர்க்ளே! ஆனால் வீட்டிற்குள் ஒன்றும் வெளியில் ஒன்றுமாய் இருப்பதல்ல எங்கள் தமிழகத்தின் பகுத்தறிவு. ஆத்திகரே அதிகம் இருக்கும் இம்மண்ணில் சாஸ்திரம் கூறும் மடமைகள் புகாமல் காத்து நிற்பதே எங்கள் பகுத்தறிவு. 95% பெரியாரின் ஆதரவாளர்கள் நாத்திகர்கள் இல்லை என்று கூறியுள்ளார்.

நவீனின் இந்த டுவீட்டுக்கு வழக்கம்போல் ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பல கருத்துக்கள் பதிவாகி வருகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.