close
Choose your channels

சூர்யா 39 படத்தில் இணையும் 'விஸ்வாசம்' டெக்னிக்கல் டீம்!

Wednesday, April 24, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யாவின் 39வது படத்தை இயக்குனர் சிவா இயக்கவுள்ளதாகவும், இந்த படத்தை ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கவுள்ளதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் அஜித்தின் 'விஸ்வாசம்' படத்திற்கு பயன்படுத்திய டெக்னிக்கல் டீமை 'சூர்யா 39' படத்திலும் இயக்குனர் சிவா பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஆம், 'விஸ்வாசம்' படத்தில் பணிபுரிந்த இசையமைப்பாளர் டி.இமான், ஒளிப்பதிவாளர் வெற்றி, படத்தொகுப்பாளர் ரூபன் ஆகியோர் 'சூர்யா 39' படத்திலும் பணிபுரியவுள்ளனர்.

சூர்யா தற்போது இயக்குனர் சுதாகொங்காரா இயக்கத்தில் உருவாகி வரும் 'சூரரைப் போற்று' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு அவர் இயக்குனர் சிவாவுடன் வரும் ஜூன் அல்லது ஜூலையில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் 'சூர்யா 39' படத்தில் நடிக்கவுள்ள நாயகி உள்பட மற்ற நட்சத்திரங்களின் தேர்வில் இயக்குனர் சிவா பிசியாக உள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.