close
Choose your channels

'தளபதி 64' படத்தில் இணைந்த பெண் இயக்குனர்?

Thursday, May 16, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிக்கவுள்ள 'தளபதி 64' திரைப்படத்தை 'மாநகரம்' இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. வெகுவிரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகலாம். இந்த நிலையில் இந்த படத்தின் இன்னொரு தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

'தளபதி 64' திரைப்படத்தில் 'சட்டம் ஒரு இருட்டறை 2' என்ற படத்தை இயக்கிய பெண் இயக்குனரான சினேகா பிரிட்டோ இணைந்துள்ளதாகவும், இவர் இந்த படத்தில் உதவி இயக்குனராக பணிபுரியவுள்ளதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி இந்த படத்தை சினேகா பிரிட்டோவின் தந்தை பி.விமல் என்பவர் தயாரிக்கவுள்ளதாகவும் செய்திகள் பரவி வருகிறது. பி.விமல் என்பவர் விஜய்யின் நெருங்கிய உறவினர் என்பதும், விஜய் நடித்த 'ரசிகன்', 'தேவா', 'செந்தூரப்பாண்டி' போன்ற படங்களை இவர்தான் தயாரித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.