close
Choose your channels

4 வருடத்திற்கு பின்னர் ரீ-எண்ட்ரி ஆகும் தனுஷ் பட இயக்குனர்

Monday, December 28, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்த 'திருடா திருடி', 'சீடன்' உள்பட ஒருசில படங்களை இயக்கியவர் இயக்குனர் சுப்பிரமணிய சிவா. இவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது மீண்டும் ரீஎண்ட்ரி ஆகி புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார்.


பிரபுசாலமன் அறிமுகப்படுத்திய ஹீரோ சந்திரன், சுப்பிரமணிய சிவா இயக்கும் அடுத்த படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் நாயகி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. முதல் படமான 'கயல்' படத்தில் ரொமான்ஸ் நாயகனாக நடித்த சந்திரன் இந்த படத்தில் ஆக்சன் அவதாரம் எடுக்கவுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.