close
Choose your channels

முதன்முதலாக விஜய் படத்தில் இணையும் ஜெயம் ரவி?

Saturday, October 31, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்த ஆண்டில் 'ரோமியோ ஜூலியட்', 'சகலகலா வல்லவன்', 'தனி ஒருவன்' ஆகிய மூன்று ஹிட் படங்களை கொடுத்த ஜெயம் ரவி தற்போது 'நாய்கள் ஜாக்கிரதை' இயக்குனர் சக்தி செளந்திரராஜன் இயக்கத்தில் 'மித்ரன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கின்றார்.

இந்நிலையில் இயக்குனர் விஜய் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஜெயம் ரவி ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. 'இது என்ன மாயம்' படத்தை அடுத்து 'குமரிக்கண்டம்' என்ற தலைப்பில் ஒரு கதையை விஜய் எழுதியுள்ளதாகவும், இந்த கதையை கேட்ட ஜெயம் ரவி, இதில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஜெயம் ரவி ஒப்புக்கொண்டதை அடுத்து இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகளை விஜய் தொடங்கிவிட்டதாகவும், இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விபரங்களுடன் கூடிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.