close
Choose your channels

நடித்து கொண்டிருந்தபோதே மாரடைப்பால் உயிரிழந்த நடிகர்: வைரல் வீடியோ!

Tuesday, August 10, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடித்துக் கொண்டிருந்த போதே மாரடைப்பு காரணமாக கீழே விழுந்து உயிரிழந்த நடிகர் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு என்ற தாலுகாவிற்கு அருகிலுள்ள அரசம்பட்டு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் நாடக நடிகர் கமலநாதன் அவர்கள் இவர் நேற்று இரவு அர்ஜுன் தவசி தெருக்கூத்து நாடகத்தில் நடித்துக்கொண்டிருந்தார்

மிகவும் அருமையாக அவர் நடித்துக் கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் நடித்துக்கொண்டிருக்கும் போதே மயங்கி கீழே விழுந்தார். இதனையடுத்து அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது அவர் காலமாகி விட்டதாக அறிவித்தனர்

தெருக்கூத்து நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்த நாடக நடிகர் கமலநாதன் அவர்களுக்கு நாடக நடிகர்கள் மற்றும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.