close
Choose your channels

'வாரிசு' படத்தின் படப்பிடிப்பு திடீர் நிறுத்தமா? விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி

Tuesday, September 20, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் ’வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் திடீரென இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்து விஜய் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விஜய், ராஷ்மிகா மந்தனா நடிப்பில், வம்சி இயக்கத்தில், தில் ராஜு தயாரிப்பில், தமன் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’வாரிசு’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் சென்னை, ஹைதராபாத், விசாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ’வாரிசு’ படத்தின் இயக்குனர் வம்சிக்க்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் ஒரு வாரம் பூரண ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதை அடுத்து ’வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு ஒரு வாரத்திற்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. .

விஜய், ராஷ்மிகா மந்தனா பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு உள்பட பலர் நடிக்கின்றனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவிண கே.எல் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.