close
Choose your channels

பிரபுசாலமன் - தனுஷ் படத்தில் கணேஷ் வெங்கட்ராமன் ரோல் என்ன?

Saturday, January 23, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பிரபுசாலமன் இயக்கிய திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு 'ரயில்' அல்லது 'மிரட்டு' என்ற டைட்டில் வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் 'தனி ஒருவன்' கணேஷ் வெங்கட்ராமன் நடித்துள்ளார். இந்த படத்தில் தன்னுடைய கேரக்டர் குறித்து கணேஷ் வெங்கட்ராமன் பேட்டி ஒன்றில் கூறியபோது, 'இந்த படத்தில் ஐந்து அல்லது ஆறு கிளைக்கதைகள் இருக்கின்றது. அதில் ஒரு கிளைக்கதையில் நான் நடித்துள்ளேன். இந்த படத்தில் எனக்கு ஜோடி இல்லை. சோலோவாக நடித்துள்ளேன்.

இந்த படத்தின் என்னுடைய கேரக்டர் மிகவும் பாசிட்டிவ் ஆனது. அதுமட்டுமின்றி இந்த படத்தின் கிளைமாக்ஸூக்கு எனது கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்கும். என்னுடைய பகுதியின் படப்பிடிப்பை கடந்த வாரம் முடித்துவிட்டேன்' என்று கூறியுள்ளார்.

தனுஷ் ரயில்வே கேண்டீன் ஊழியராகவும் கீர்த்தி சுரேஷ் கேரள பெண்ணாகவும் நடித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.