close
Choose your channels

'காதல் மன்னன்' ஜெமினிகணேசன் பேரன் நடிக்கும் அடுத்த படம்

Thursday, July 4, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பழம்பெரும் நடிகரும் தமிழ் சினிமாவின் 'காதல் மன்னன்' என்ற பெயர் பெற்றவருமான ஜெமினிகணேசனின் பேரன் அபினய், கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்த கணிதமேதை ராமானுஜன் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'ராமானுஜன்' என்ற படத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் அபினய் நடிக்கவுள்ள அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ள ஒரு புதிய தமிழ்ப்படத்தில் அபினய் ஹீரோவாக நடிக்கவுள்ளார். அபினய் ஜோடியாக நடிகை ஸ்மிருதி வெங்கட் நடிக்கவுள்ளார். இவர் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற அருண்விஜய்யின் 'தடம்' படத்தின் நாயகி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் காமெடி நடிகர் சாம்ஸ் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து கொண்டிருப்பதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.