close
Choose your channels

விஜய்சேதுபதியுடன் இணையும் பா.ரஞ்சித்!

Tuesday, December 31, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ மற்றும் ‘காலா’ படங்களை இயக்கிய இயக்குனர் பா.ரஞ்சித், தற்போது ஆர்யா நடிக்கும் ஒரு படத்தை இயக்கவிருப்பதாகவும் இந்த படத்தின் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இயக்குனர் பா.ரஞ்சித் மற்றும் விஜய்சேதுபதி ஆகிய இருவரும் இணைந்து ஒரு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை நாளைய புத்தாண்டில் வெளியிடவுள்ளனர். இந்த படம் தான் ‘ஞானச்செருக்கு’.

தரணி ராஜேந்திரன் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் வீரசந்தானம், வீரஎயினன், தமிழ்மாறன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சக்ரவர்த்தி இசையில், கோபி துரைசாமி ஒளிப்பதிவில் மகேந்திரன் கணேசன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் ஒரு ஓவியக்கலைஞர் குறித்த கதையம்சம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.