close
Choose your channels

'குட்நைட்' நடிகைக்கு திடீர் திருமணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா? வைரல் புகைப்படங்கள்..!

Monday, March 18, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மணிகண்டன் நடித்த ’குட்நைட்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடித்த நடிகை மீதா ரகுநாத்துக்கு திருமணம் நடந்துள்ள நிலையில் திருமணம் குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

‘முதல் நீ முடிவு நீ’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை மீதா ரகுநாத். இவர் ’குட்நைட்’ படத்தில் நாயகியாக நடித்த நிலையில் சமீபத்தில் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்ததாக தன்னுடைய இன்ஸ்டாகிராமில்; போட்டோக்களை ஷேர் செய்திருந்தார். இந்த நிலையில் அவருக்கு தற்போது திருமணம் ஆகி உள்ள நிலையில் கணவருடன் இருக்கும் புகைப்படம் அவரது இன்ஸ்டாவில் பதிவு செய்யப்பட்டதை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்

‘முதல் நீ முடிவு நீ’ என்ற திரைப்படத்தில் பள்ளி மாணவி மற்றும் கல்லூரி மாணவி கேரக்டரில் நடித்து முதல் படத்திலேயே நல்ல நடிகை என்ற பெயரை எடுத்தவர் மீதா ரகுநாத். அதன் பிறகு ’குட்நைட்’ திரைப்படத்தில் நடித்த அவர் மணிகண்டனுக்கு இணையாக நடிப்பில் அவர் அசத்தியிருப்பார் என்று குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அடுத்தடுத்து அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் குவியும் என்ற எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தனக்கு நிச்சயதார்த்தம் ஆனதாகவும் நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் தற்போது அவருக்கு திருமணம் ஆகி உள்ள நிலையில் திருமண புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மீதா ரகுநாத்தை திருமணம் செய்தவர் அவரது நீண்ட நாள் நண்பர் என்றும் இருவரும் சில வருடங்களுக்கு காதலித்ததாக கூறப்படுகிறது. மீதா ரகுநாத்துக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.