close
Choose your channels

விஜய்யுடன் 'மெர்சல்' தயாரிப்பாளர்: 10 வருட சேலஞ்ச்

Thursday, January 17, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் '10 வருட சேலஞ்ச்' வைரலாகி வருகிறது. கோலிவுட் பிரபலங்கள் உள்பட பலர் தங்களுடைய 10 வருடத்திற்கு முந்தைய புகைப்படத்தையும் தற்போதைய புகைப்படத்தையும் பதிவு செய்து வருகின்றனர். ஜிவி பிரகாஷ், சாந்தனு உள்பட பல நடிகர், நடிகைகள் இந்த 10 வருட சேலஞ்சில் பங்கு பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் 'மெர்சல்' படத்தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் ஹேமா ருக்மணி தனது சமூக வலைத்தள பக்கத்திலும் இந்த '10 வருட சேலஞ்ச்' குறித்த ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

விஜய்யுடன் ஹேமா ருக்மணி பத்து வருடத்திற்கு முன் எடுத்து கொண்ட ஒரு புகைப்படத்தையும், 'மெர்சல்' படத்தின் படப்பிடிப்பின்போது விஜய்யுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் ஹேமா ருக்மணி தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவுசெய்துள்ளார். ஹேமா ருக்மணி, விஜய்யின் தீவிர ரசிகை என்பதால் அவர் இந்த புகைப்படங்களை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.